ம.பி.யில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் 12 பேர் காயம்

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கட்னி - சோபான் பயணிகள் ரெயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பயணிகள் காயமடைந்தனர்.
ம.பி.யில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் 12 பேர் காயம்
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் கட்னியில் இருந்து சோட்னா நோக்கி பயணிகள் ரெயில் தினமும் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

வழக்கம்போல் நேற்று இரவு கட்னியில் இருந்து பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. சல்னா மற்றும் பிபரியகாலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரெயிலின் ஐந்து பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் 12-க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து ரெயில்வே மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர். பயணிகள் ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com