பீகாரில் சோகம் - ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்து 27 பேர் பலி

பீகார் மாநிலத்தில் ஓடும் பேருந்து கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். #Accident
பீகாரில் சோகம் - ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்து 27 பேர் பலி
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டத்தில் இன்று மதியம் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள மோதிஹரி என்ற பகுதியில் வந்த போது, பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து, மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இறந்து கிடந்தவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Accident #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com