திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் - 12 பேர் கைது

திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம், கார்-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் 15 வேலம்பாளையம் சோளிப்பாளையம் ரோட்டில் எஸ்.கே.எஸ். அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்த குடியிருப்பில் பணம் வைத்து சூதாடுவதாக அனுப்பர் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு அதிரடியாக நுழைந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அங்கு சூதாடி கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் சரவணகுமார் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வந்த 2 கார்கள், 10 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

குடியிருப்பு உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com