

மதுரை:
வண்டியூர் சவுராஷ்டிரா புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி உமாதேவி (வயது 48). டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவர் கே.கே.நகர் 80 அடி சாலையில் மொபட்டில் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் உமா தேவி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் மதுரை அண்ணாநகரில் உள்ள கண் மருத்துவமனையில் ஊழியராக பணி புரிந்து வருபவர் ஷோபனா (22). நேற்றிரவு இவர் மோட்டார் சைக்கிளில் புதூர் ஐ.டி.ஐ. அருகில் சென்றார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் ஷோபனா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.