இலங்கையில் பேருந்தில் குண்டுவெடிப்பு - 12 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் படுகாயம்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததில் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் பேருந்தில் குண்டுவெடிப்பு - 12 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் படுகாயம்
Published on

கொழும்பு:

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து, ராணுவ தளம் உள்ள தியாதளவா நகரத்தை நோக்கி நேற்று பேருந்து ஒன்று சென்றது. கஹகோல்லா பகுதியில் அந்த பேருந்து வந்தபோது, அது திடீரென வெடித்து சிதறியது.

இதில் அந்த பேருந்து பலத்த சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த 7 ராணுவ வீரர்கள், 5 விமானப்படை வீரர்கள், பொது மக்கள் 7 பேர் ஆகிய 19 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தீவிரவாத தாக்குதலாக தெரியவில்லை என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. யாரோ ஒரு பயணி கொண்டு வந்த கையெறி குண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com