கோடம்பாக்கம் அருகே கிளப்பில் சூதாட்டம் - 12 பேர் கைது

வடபழனி அருகே கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 12 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.7 ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

போரூர்:

வடபழனி கோடம்பாக்கம் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கோடம்பாக்கம் சம்பூர்ணம் அவென்யூவில் செயல்பட்டு வரும் கிளப்பில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு உள்ள அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மற்றொரு கிளப்பிலும் போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பிடித்தனர் அவர்களிடமிருந்து பணம் ரூ.7 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com