ரெட்டியார்பாளையத்தில் 12 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

ரெட்டியார்பாளையத்தில் வீட்டு வேலை செய்யாததை கண்டித்ததால் 12 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியார்பாளையத்தில் 12 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பாளையம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் டீச்சர் காலனியை சேர்ந்தவர் அங்காளன், ஆட்டோ டிரைவர். இவருக்கு குழந்தை இல்லாததால் தனது தம்பி தணிகைவேலுவின் 3-வது மகளான தனப்பிரியா (வயது12)வை பிறந்த 6 மாதம் முதல் தத்தெடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். தனப்பிரியா அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம்வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையே அங்காளனுக்கு பிச்சைவீரன்பேட்டில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த வீட்டில் குடியேற அங்காளன் அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். இன்று பால்காய்ச்சி குடியேறுவதற்காக நேற்று வீட்டை சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஆனால் தனப்பிரியா எந்த வேலையும் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்காளன் மனைவி ருக்மணி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த தனப்பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்கிருந்து டீச்சர் காலனியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அங்கு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com