மதுரையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் கிடைக்காததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மதுரை:

மதுரை வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகள் சந்தியா (வயது 16) இவர், மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

தர்மபுரி அருகே உள்ள எரியூரில் 10-ம் வகுப்பு படித்து முடித்த சந்தியா அந்த சான்றிதழை வாங்க முடியவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் இருந்தால்தான் பிளஸ்-2 படிக்க முடியும் என்று ஆசிரியர்கள் மாணவியிடம் கூறியதாக தெரிகிறது.

இதற்காக மாணவி சந்தியா சான்றிதழை பெற பல்வேறு முயற்சிகள் எடுத்தும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கருப்பா யூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com