113-வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

சி.பா.ஆதித்தனாரின் 113-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிர மணியன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
113-வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவிப்பு
Published on

சென்னை:

‘‘தமிழர் தந்தை’’ சி.பா.ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலை சென்னை எழும்பூரில் 5 சாலைகள் சந்திக்கும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு அந்த சிலையை திறந்து வைத்தார். அதோடு அந்த பகுதி சாலைக்கு ‘‘சி.பா.ஆதித்தனார் சாலை’’ என்றும் பெயர் சூட்டினார்.

கடந்த மே மாதம் அந்த 5 சாலை சந்திப்புப் பகுதியில் சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து நெருக்கடியை சீர்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து அங்கிருந்த சி.பா.ஆதித்தனாரின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டது.

அந்த சாலைப் பகுதியில் வட்ட வடிவ பூங்காவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் 19-ந்தேதி இரவு அந்த சிலை அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. சி.பா.ஆதித்தனாரின் 113-வது பிறந்த நாளை, வழக்கம் போல அவர் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சிலை அமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சி.பா.ஆதித்தனாரின் 113-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிர மணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல், ஏ.எம்.என். டி.வி., மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாபா.பாண்டிய ராஜன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-

வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகங்கா, ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை.

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி.

தி.மு.க. சார்பில் மகளிரணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்து சோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், கராத்தே தியாகராஜன், துறைமுகம் ரவிராஜ், ஆலங் குளம் எம்.எஸ்.காமராஜ், துரைராஜ், மாரிஸ்வரன்.

பா.ஜனதா துணை தலைவர் பி.டி.அரசகுமார், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் தங்கமணி, நரேந்திரன், காளிதாஸ், ஜெய்சங்கர், லோகநாதன், பாஸ்கர், ஏழுமலை.

ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, ஜீவன், ராமதாஸ், முராஜ் புகாரி.

பெருந்தலைவர் மக்கள் கட்சி புழல் தர்மராஜ், பாலாஜி, சிவகுமார், ராபர்ட், அய்யர், விக்டர், மாரி, கப்பல்ராஜ், நாகராஜ், ரவி, செல்வம், அமல்ராஜ், சுரேஷ்பாலாஜி, செல்வராஜ், ராஜசமாரன், முருகன், மணிமாறன், சுதாகர், பால்துரை, வக்கீல் மணிவாசகம், ராஜ்துரை.

சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் தங்கமுத்து ஷாநவாஸ், வில்லியம்ஸ், அருண்குமார், ராஜலிங்கம், துரை மாணிக்கம், முனிஸ்வரன், குமார், ரவி, முத்துகுமார், சுரேஷ் கண்ணன், கொடுங்கையூர் முருகன்.

புதிய நீதி கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், சேதுராமன், ராஜாராம், பழனி, பிரகாஷ், செல்வம், சுதர்சார், மனோரமூர்த்தி, லோகநாதன், முரளி, ராமசாமி, ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ரமேஷ், துரைராஜ், ஜானகிராமன், ஜெகன்.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம், டாக்டர் கருணாநிதி, தண்டுபத்து ஜெயராமன், எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், தோரண மலை முருகன் கோவில் சென்னை பக்தர் குழு சார்பில் பிரணாவ் மீடியா அதிபர் ரமேஷ் மற்றும் செண்பகராமன், தேரிகுடியிருப்பு ஊர்தலைவர் ஐசக்துரை.

சென்னைவாழ் நாடார் சங்கத் தலைவர் பி.சின்ன மணி நாடார், பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமி நாதன், துணைத் தலைவர் கரு.சின்னத்துரை, மீஞ்சூர் எம்.ஏ.திரவியம், செயலாளர் கே.எம்.செல்லத்துரை, எஸ்.செல்லத்துரை, பார்வதி முத்து, தோப்பு மணி, பேரி லோவன்பட்டி இந்து நாடார் உறவின் முறை முன்னாள் துணை செயலாளர் செல்வராஜ், மணலி மாரிமுத்து, புழல் தர்மராஜ், ஜூலியன் நாடார்.

சென்னைவாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம், நெல்லை தெட்சிணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல், இயக்குனர் தங்கவேல், கந்தசாமி, பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ரங்கசாமி, சோலையப்பன், தனுஷ்கோடி, அணியாப்பூர் நாடார் சங்கத் தலைவர் தங்கவேல் நாடார், பொருளாளர் மனோகரன்.

சென்னைவாழ் குளத்தூர் இந்து நாடார் உறவின் முறை தலைவர் தாமஸ் நாடார், கவுரவ தலைவர் பாண்டியன், பச்சைமால், ஆனந்தராஜ், கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் ஜூலியஸ், வண்ணாரப் பேட்டை நாடார் சங்கத் தலைவர் ராஜன், பொருளாளர் ராஜேஷ், நாடார் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, துணைத் தலைவர் காமாட்சி.

வடசென்னை தலைவர் மகராஜன், பொருளாளர் தங்கதுரை, அவைத் தலைவர் முத்துக்கனி, தென்னரசு, பாண்டியன், கோபி, சுப்பு ராஜ், அம்மன் சேகர், எமர்சன், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், எம்.மாரித்தங்கம், ராஜன், இமானுவேல், தங்கதுரை, எவர்கிரீன் நாடார் திருமண தகவல் நிலைய உரிமையாளர் சக்கரவர்த்தி, திருநெல்வேலி தெட்சிணமாற நாடார் சங்கம்-கல்லூரி செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார், நாடார் பேரவை தென் சென்னை மாவட்ட செயலாளர் விமல்ராஜ்.

அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், சத்திரிய பாசறை ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், எர்ணாவூர் நாடார் உறவின்முறை துணைத் தலைவர் சுதந்திர தாஸ், பொதுச் செயலாளர் சுந்தரேசன், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் காயல் இளவரசு, மாநில துணை பொதுச் செயலாளர் முத்துப் பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com