டெல்லியில் கொடூரம் - இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி கற்பழிப்பு

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி இன்று துப்புரவு பணியாளரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DelhiESIHospital #11yearoldGirl
டெல்லியில் கொடூரம் - இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி கற்பழிப்பு
Published on

புதுடெல்லி:

நாட்டின் தலைநகரான டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் ஒன்றாக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் 894 கற்பழிப்பு சம்பவங்கள் இங்கு அரங்கேறியுள்ளன.

இந்த ஆண்டில் போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி அன்றாடம் இரு சிறுமிகள் டெல்லியில் கற்பழிப்புக்குள்ளாவதாக தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாத நிலவரப்படி 282 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமிக்கு இன்று அதிகாலை திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.

வலியை குறைக்க மருந்து கேட்பதற்காக தனது வார்டில் இருந்து தனியாக வெளியே வந்த அந்த சிறுமியை அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் பார்த்து விட்டார். மருந்து தருவதாக கூறி தனது அறைக்கு அழைத்து சென்ற அவர் நோயாளி சிறுமி என்பதை கூட நினைத்துப் பார்க்காமல் அவரை கற்பழித்ததாக போலீசில் இன்று காலை புகார் அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒப்பந்த பணியாளரான சுமார் 40 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #DelhiESIHospital #11yearoldGirl

X

Maalai Malar
www.maalaimalar.com