தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் 11 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்

தமிழகத்தில் 11 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் 2,600 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்
Published on

மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதால் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற கடிதம் கொடுத்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து பலர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

வருகிற 31-ந்தேதி அவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெறுகின்ற நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதால் அங்கு பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 2,600 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல். சென்னை வட்டத்தில் 42 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. இங்கு 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு வட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

வாடிக்கையாளர் சேவை மையம், டெலிபோன் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் வாடிக்கையாளர் சேவை மையமும், டெலிபோன் பழுது பார்க்கும் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பணி கொடுப்பதற்கு எப்படியும் ஒரு மாத காலமாகும். அதுவரையில் சேவை பாதிக்கும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com