தஞ்சையில் டி.டி.வி.தினகரனுடன் 11 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

தஞ்சையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை 11 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.
தஞ்சையில் டி.டி.வி.தினகரனுடன் 11 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை 11 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மாமியார் கடந்த வாரம் மரணம் அடைந்தார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள டி.டி.வி.தினகரன் தஞ்சை வந்தார். அவரை எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), உமாமகேஸ்வரி (விளாத்திக்குளம்), சுப்பிமணியன் (சாத்தூர்) சுந்தர்ராஜன் (ஓட்டப்பிடாரம்) மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) தங்கத்துரை (நிலக்கோட்டை) பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), ஜக்கையன் (கம்பம்) கதிர்காமு (பெரியகுளம்) முத்தையா (பரமக்குடி) ரெங்கசாமி (தஞ்சாவூர்) ஆகியோர் சந்தித்து பேசினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com