பூட்டிய வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டிய வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்பு
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

10 பேர் தூக்கியில் தொங்கிய நிலையிலும், ஒரு 75 வயது வயது பெண் தரையில் கிடந்த படியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com