ஆரணி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

டி.வி.பார்த்ததை கண்டித்த தாய் மயக்கமடைந்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை
தற்கொலை
Published on

ஆரணி:

ஆரணியை அடுத்த இரும்பேடு தருமராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் சென்னையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஷாலினி என்கிற சன்மதி (15). ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்தார். அவரை அவரது தாயார் காஞ்சனா, பரீட்சை நெருங்கி விட்டது. படிக்காமல் டி.வி. பார்க்கிறாயோ என கண்டித்துள்ளார்.

அப்போது காஞ்சனா மயக்கநிலை அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும்மில்லாத நிலையில் மாணவி ஷாலினி, தன்னால் தான் தாய் காஞ்சனாவிற்கு இந்த நிலை ஏற்பட்டது என கருதி மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார். அப்போது அங்கு வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்து பின்னர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ஷாலினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆரணி தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com