ராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிராக்டர் டிரைவர் கைது

ராஜபாளையம் அருகே கண்மாய்க்கு அழைத்து சென்று 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள கிறிஸ்துராஜ புரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே ஊரைச் சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமார் (வயது35) அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு பள்ளி உதவியாளர் கலா(40) உடந்தையாக இருந்துள்ளார். மாணவியின் வீடும், சுரேஷ்குமாரின் வீடும் அருகருகே உள்ளன.

சம்பவத்தன்று சுரேஷ் குமார் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்து சென்றார்.

ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கண்மாய்க்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை சுரேஷ்குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதில் மாணவி அழுது அடம்பிடித்ததை பார்த்து பயந்துபோன சுரேஷ்குமார் அவரை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார். பின்னர் மாணவி தனியாக வீடு திரும்பினார்.

அலங்கோல நிலையில் வந்த மாணவியிடம் தாயார் கேட்டபோது மாணவி நடந்த சம்பவத்தை விளக்கினார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமாரையும், பள்ளி உதவியாளர் கலாவையும் கைது செய்தார். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com