சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் 57 ஆயிரத்து 500 பேர் எழுதுகிறார்கள்.
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது
Published on

சென்னை:

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் 57 ஆயிரத்து 500 பேர் எழுதுகிறார்கள்.

இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் 10-ம் வகுப்பு தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக இந்தியாவில் 4 ஆயிரத்து 453 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளில் 78 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

12-ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வை எழுத 4 ஆயிரத்து 138 மையங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர வெளிநாடுகளில் 71 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் 10-ம் வகுப்பு தேர்வை 4 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளிகளும், 12-ம் வகுப்பு தேர்வை 2 ஆயிரத்து 846 மாற்றுத்திறனாளிகளும் எழுதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வை 41 ஆயிரம் பேரும், 12-ம் வகுப்பு தேர்வை 16 ஆயிரத்து 500 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 500 பேர் எழுதுகிறார்கள். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி வரை நடக்கிறது. இதேபோல் 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com