செந்துறை அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

திண்டுக்கல் மாவட்டம், செந்துறையில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.
பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளதை படத்தில் காணலாம்.
பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளதை படத்தில் காணலாம்.
Published on

செந்துறை:

செந்துறை கக்கன் காலனியை சேர்ந்த முருகேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது27). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை வீட்டிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிலுவத்தூர் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே புவனேஸ்வரிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 3 கிலோ இருந்தது.

ஆம்புலன்ஸ் உதவியாளர் பன்னீர்செல்வம், வாகன ஓட்டுனர்கள் கருணை மற்றும் ஸ்டீபன் ஆகியோர் தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாக சிலுவத்தூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com