பேரளம் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி

பேரளம் அருகே சாலையை கடக்க முயன்ற போது 108 ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விபத்து
விபத்து
Published on

பேரளம்:

பேரளம் அருகே உள்ள கீரனூர் ஜெயராஜ் நகரை சேர்ந்தவர் பாலையன் (வயது 55). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சைக்கிளில் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது மயிலாடு துறையில் இருந்து திருவாரூர் நோக்கி அவசர சிகிச்சை நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பாலையன் படுகாயமடைந்தார். இதையடுத்து அதே ஆம்புலன்சில் அவரை ஏற்றிக் கொண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் பிரவு பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com