ஆவடியில் ஒரே நாளில் சாலையோரம் வாகனம் நிறுத்திய 106 பேர் மீது வழக்கு

ஆவடியில் ஒரே நாளில் சாலையோரத்தில் விதி முறைகளை மீறி நிறுத்திய 106 மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆவடி:

பூந்தமல்லி போக்குவரத்து காவல் மாவட்ட துணை கமி‌ஷனர் ராஜசேகரன் தலைமையில் போக்குவரத்து உதவி கமி‌ஷனர் ஜெயகரன் சாமுவேல், ஆவடி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எடிசன் சாந்தகுமார் மற்றும் போலீசார், ஆவடி, புதிய ராணுவ சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. சாலையோரத்தில் விதி முறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு சங்கிலி போட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோல் ஆவடி போக்குவரத்து சரகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து உதவி கமி‌ஷனர் ஜெயகரன் சாமுவேல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com