பாபநாசத்தில் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்

பாபநாசத்தில் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் சோழராஜன் தெரிவித்துள்ளார்.
பாபநாசத்தில் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்
Published on

பாபநாசம்:

பாபநாசம் வேளாண்மை வட்டாரத்தில் சம்பா, தாளடி சுமார் 4500 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி தற்போது அறுவடை நிறைவடைந்த நிலையில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடிக்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு முன்னேற்றபாடாக விவசாயிகள் குறுகிய கால ரகங்கள் கோ.ஆர்.51, ஏ.டி.டி.43 (அதிசய பொன்னி), ரகங்களை தேர்வு செய்துள்ளனர்.

 பாபநசம் பகுதியில் விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு செய்து இயந்திர நடவிற்காக பாத்தி நாற்றாங்கால் அமைக்கும் பணியும், வரிசை நடவு நாற்றாங்கால் அமைக்கும் பணியும் தீவிரமடைந்து வருகிறது.

பாபநாசம் வட்டார வேளாண்மை கோட்டத்திற்கு சுமார் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோபு ராஜபுரம், ரெகுநாதபுரம் போன்ற பகுதிகளில் நெல் தரிசில் பருத்தி, வீரிய ஒட்டு பருத்தி ரகங்களான ஜாது, ஆர்.சி.ஹச். பன்னி, ஜாக்பாட், போன்ற போல்காட் ரகங்கள் சுமார் 400 ஹெக்டேர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சோழராஜன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com