மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுமி கற்பழித்து கொலை

மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுமி கற்பழித்து கொலை
Published on

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள குடிசை பகுதியில் வசித்த 10 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார்.

பக்கத்து கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவரை காணவில்லை.

இந்த நிலையில் அந்த சிறுமியின் உடல் அருகில் உள்ள சாக்கடையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்வதற்கு முன்பு சிறுமி கடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மூச்சு திணறும் அளவுக்கு அந்த சிறுமி மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட் தீக்காயம் இருந்தது.

சிறுமியை கடத்தி கற்பழித்து கொன்ற குற்றவாளியான விஷ்ணுபிரசாத் என்கிற பாபுவை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்குமாறும் மாநில முதல் மந்திரி கமல்நாத் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ளார்.

ஹம்சி மாவட்டம் காந்தருளி கிராமத்தில் 15 வயது சிறுமியை 2 பேர் கடத்தி கற்பழித்து உள்ளனர். இது தொடர்பாக சோமன், சுகைகல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 வயது சிறுமி ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தும்கா கோர்ட்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com