இந்த ஆண்டு நடைபெறும் 10 ஓவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டி அறிமுக விழா

இந்த ஆண்டு நடைபெறும் 10 ஓவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அறிமுகவிழா ஐதராபாத்தில் நடந்தது.
இந்த ஆண்டு நடைபெறும் 10 ஓவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டி அறிமுக விழா
Published on

சென்னை:

கடந்த சில ஆண்டுகளாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

பிரபல நடிகர்கள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டி இதுவரை 20 ஓவர் போட்டிகளாக நடந்தன. இந்த ஆண்டு இது 10 ஓவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ‘சி.சி.எல். டி10 பிளாஸ்ட்’ என்று பெயர் சூட்டி உள்ளனர்.

90 நிமிடம் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் திரைப்பட நடிகர்கள் கலந்து கொண்டு ஆடுகிறார்கள்.

இந்த ஆண்டு நடைபெறும் சி.சி.சி. டி.10 பிளாஸ்ட் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அறிமுகவிழா ஐதராபாத்தில் நடந்தன. இதில் சென்னை ரைனோர்ஸ் அணி உரிமையாளர் ஸ்ரீகாந்த், கேரள ஸ்ட்ரைகர்ஸ் அணி உரிமையாளர் ராஜ்குமார், ஸ்ரீபிரியா ராஜ்குமார், மும்பை ஹீரோஸ் அணி உரிமையாளர் போனிகபூர், தெலுங்கு வாரியர்ஸ் அணி உரிமையாளர் சச்சின் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதவிர கர்நாடகா புல்டவுசர் அணி கேப்டன் சுதீப், கேரளா ஸ்ட்ரைக்கர் அணி கேப்டன் பாலா , மும்பை ஹீரோஸ் அணி கேப்டன் சோஹைல் கான், சி.சி.எல் நிறுவனர் விஷ்ணு இந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி கூறிய அவர்கள், நடைபெற இருக்கும் 10 ஓவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவரும். அனைவரும் ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com