பீகாரில் கனமழை - இடி, மின்னலுக்கு 10 பேர் பலி

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் மழை தொடர்பான விபத்துகளுக்கு இதுவரை 10 பேர் பலியாகினர்.
பீகாரில் கனமழை -  இடி, மின்னலுக்கு 10 பேர் பலி
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் இடி, மின்னல் தாக்கி பலர் பலியாகினர்.  கடந்த 48 மணி நேரத்தில் மழை தொடர்பான விபத்துகளுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.

ககாரியா மற்றும் பங்கா பகுதிகளில் தலா 3 பேரும், ஜாமுவி பகுதியில் 2 பேரும், பக்சர், பெகுசராய் பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் மழை தொடர்பான விபத்துகளில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி அளித்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com