

சிம்லா:
இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள தியுனி சாலையில் ஸ்னைல் என்ற பகுதி அருகே இன்று காலை பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஜீப், எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.