உத்தரகாண்ட் - பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். #UttarakhandBusAccident
உத்தரகாண்ட் - பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு திஹ்ரி மாவட்ட பேரிடர் மீட்புக்குழு மற்றும் சம்பா மாவட்ட மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் பலியானவர்களுக்கு மாநில அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது. #UttarakhandBusAccident

X

Maalai Malar
www.maalaimalar.com