காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் அனந்தநாக் மாவட்டம் உள்ளது.

இங்குள்ள நவ்காம் அருகே உள்ள வெரிநாக் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும், மாநில போலீசாரும் இணைந்து இன்று காலை அந்த பகுதிக்குள் நுழைந்தனர்.

பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்ட னர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி முகமது இக்பால் குண்டு பாய்ந்து பலியானான்.

அந்த பகுதியில் மேலும் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தேடும் வேட்டையில் பாதுகாப்பபு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்த 6 உளவாளிகள் காஷ்மீரில் கைதாகி உள்ளனர். பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த முயன்றதாக அவர்கள் கைதானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com