

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக பந்து வீச்சாளர் பதவிக்கு ஜேசன் கில்லெஸ்பியை நியமிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விரும்பினார். ஆனால், தற்போது அவர் பப்பு நியூ கினியா அணியின் பயிற்சியாளராக உள்ளதால் அவரை நியமிக்க இயலாது என்று சிஏசி கூறிவிட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய தீவிரமாக ஆலோசனை செய்தேன் என்று கில்லெஸ்பி கூறியுள்ளார்.
இதுகுறித்து கில்லெஸ்பி கூறுகையில் ‘‘இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தீவிரவமாக யோசித்தேன். இதுகுறித்து எனது குடும்பத்துடன் விவாதித்தேன். பின்னர், எனது முடிவை கைவிட்டுவிட்டேன்.