பெண்களின் திடீர் கோபம் தரும் தொல்லைகள்

நன்றாக நெருங்கிப் பழகி கொண்டிருப்பவர்களிடத்தில் திடீரென்று ஏற்படும் மனஸ்தாபம் அவர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விடும்.
பெண்களின் திடீர் கோபம் தரும் தொல்லைகள்
Published on

பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை அவருடைய மனநிலையில் இருந்துதான் யோசித்து பார்ப்பார். ‘இவ்வளவு நாள் நன்றாக பழகிவிட்டு இப்படி நடந்து கொண்டுவிட்டாரே?’ என்ற ஆதங்கம்தான் அவரிடம் வெளிப்படும். தன் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை மட்டுமே கவனத்தில் கொள்வார். ஆனால் மற்றவர் எந்தமாதிரியான சூழ்நிலையில், நிர்பந்தத்தில் அப்படி நடந்து கொண்டார் என்பதையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

அவர் சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கான காரணங்களையும் கண்டறிய முற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் தன் தரப்பு நியாயங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அடுத்தவரின் செயல்பாட்டுக்கும் ஏதேனும் ஒரு நியாயமான காரணம் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com