திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் பருமனுக்கு காரணம்

திருமணத்திற்கு முன் அழகாக தோன்ற வேண்டும் என்று கவனம் செலுத்தும் பெண்கள் திருமணத்திற்கு பின் அதை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதனால் பெண்களின் உடல் எடை அதிகரித்துவிடும்.
திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் பருமனுக்கு காரணம்
Published on

தம்பதிகள் திருமணம் முடிந்து நிறைய விருந்துகளுக்கு செல்வார்கள். அங்கு நிறைய சாப்பிட சொல்வார்கள், பின்னர் தேன்நிலவு செல்வார்கள். நிச்சயம் வெளியிடங்களில் தான் சாப்பிட்டாக வேண்டும். இதனால் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வார்கள். புது வீட்டில் பெண்ணுக்கு சில மன அழுத்தம், பயம் இருக்கும் அதனுடன் அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்துவிடும். மேலும் வைட்டமின் குறைபாடுகளும் உடல் எடை அதிகரிக்க காரணமாகும்.

சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுவதும் ஒரு காரணம். தாய் வீட்டில் ஒரு மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடித்திருப்பார்கள், ஆனால் புகுந்த வீட்டில் வேறு மாதிரியான உணவு பழக்கம் இருக்கும். அவர்களை கவர்வதற்காக புகுந்த வீட்டு உணவு பழக்கத்திற்கு பெண்கள் மாறிவிடுவார்கள். இதனால் உடல் எடை கூடும்.

திருமணமான புதிதில் அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுதல். உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என அனைவரும் வீட்டிற்கு அழைப்பார்கள். வார இறுதியில் அல்லது வார நாட்களில் கூட இது நடைபெறும். வெளியில் சாப்பிடும் உணவுகளில் அதிக கலோரிகளும், குறைந்த சத்துகளும் இருக்கும். இதனால் உடல் எடை கூடும்.

திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டில் பெண்ணுக்கு பிடித்தது போல சாப்பிடுவார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்களது கணவருக்கு பிடித்த உணவுகளை சமைப்பார்கள். மிச்சமாகிவிட கூடாது என்று அதிகமாக சாப்பிட்டுவிடுவார்கள்.

திருமணத்திற்கு முன்னால் பெண்கள் அழகாக தோன்ற வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என சில விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அதை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதனால் பெண்களின் உடல் எடை அதிகரித்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com