வரகு அரிசி காய்கறி சாதம்

சிறுதானியங்களுடன் காய்கறி சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி, காய்கறிகள் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வரகு அரிசி காய்கறி சாதம்
Published on

வரகு அரிசி - 2 கப்,
காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) - 1 கப்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா - 2,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
தயிர் - அரை கப்,
புதினா, கொத்தமல்லி - தலா அரை கட்டு,
பச்சை மிளகாய் - 3,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வரகு அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய்யை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

தக்காளி காய்கறிகள் சற்று வதங்கியதும் தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வரகு அரிசியை சேர்த்து கிளறி மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

சூப்பரான சத்தான வரகு அரிசி காய்கறி சாதம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com