சத்தான காலை டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்

காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கேழ்வரகு கீரை ஊத்தப்பம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்
Published on

இட்லி மாவு - 1 கப்
முழு கேழ்வரகு - 1 கப்
கீரை - 1 கப் (சிறுகீரை, முளைக்கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை)
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுத்தம் செய்த கீரையை கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கீரையை போட்டு 5 நிமிடம் வதக்கி ஆற விடவும்.

வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி, கல் நீக்கி மிக்ஸியில் அரைத்து நைசாக அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளித்த இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.

புளித்த மாவில் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, வதக்கிய கீரை போட்டு நன்றாக கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தடியான ஊத்தப்பமாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com