தோசைக்கு அருமையான வேர்க்கடலை குழம்பு

சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டு கொள்ள வேர்க்கடலை குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தோசைக்கு அருமையான வேர்க்கடலை குழம்பு
Published on

பச்சை வேர்க்கடலை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி சாறு - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 
செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேர்க்கடலையை, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சாற்றை விட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

இப்போது சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி!!!

சாதம், சப்பாத்தி, பாவ் பாஜி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com