சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு

அசைவ உணவுக்கு ஈடான சுவையை தரும் காளானுடன் சத்துக்கள் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் இருக்கும்.
சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு
Published on

பட்டன் காளான் - 15
வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பசலைக்கீரை பேஸ்ட் பொருட்கள்...

பசலைக் கீரை - 1 கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
பட்டை - 1
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
கொத்தமல்லி - ஒரு கட்டு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பசலைக்கீரை பேஸ்ட்டிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி!!!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com