வயிற்று கோளாறுகளை குணமாக்கும் ஓமம் புதினா சப்பாத்தி

வயிற்று கோளாறு, அஜீரண தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஓமம் புதினா சப்பாத்தி மிகவும் நல்லது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
வயிற்று கோளாறுகளை குணமாக்கும் ஓமம் புதினா சப்பாத்தி
Published on

கோதுமை மாவு - 200 கிராம்,
புதினா - ஒரு கைப்பிடி அளவு,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுத்தம் செய்த புதினாவை எண்ணெய் விட்டு வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் வெண்ணெய், ஓமம், வதக்கிய புதினா, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிசைந்த வைத்த மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்த சப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

புதினா வாசனையும் ஓமத்தின் சுவையும் சேர்ந்து புதுவித ருசியுடன் இருக்கும் இந்த சப்பாத்தி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com