சத்தான காலை டிபன் ஓட்ஸ் சம்பா ரவை இட்லி

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், சம்பா ரவை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் ஓட்ஸ் சம்பா ரவை இட்லி
Published on

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - ஒரு கப்,

சம்பா கோதுமை ரவை - அரை கப்,

தயிர் - ஒரு கப்,

கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு,

கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  

இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

சம்பா ரவையை சிவக்க வறுத்து கொள்ளவும்.

வறுத்த ஓட்ஸ், சம்பா ரவையை கடைந்த தயிரில் சேர்த்து ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான காலை டிபன் ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com