பெண்களின் ஆல்-டைம் ஃபேவரிட் ஆடைகளின் லேட்டஸ்ட் 10 டிரெண்டிங் குர்திஸ்!

அனைத்து இடங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் ஒரே ஆடை 'குர்தி' தான்
Stylish Kurtis
Published on

பெண்களின் அன்றாட உடைகள் முதல் விசேஷ வீட்டு சுபநிகழ்ச்சிகள் வரை அனைத்து இடங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் ஒரே ஆடை 'குர்தி' ஆகும்.

நாகரிக வளர்ச்சியில், பாரம்பரிய உடைகளுடன் மேலைநாட்டு ஸ்டைலை இணைத்து (Indo-Western) உருவாக்கப்படும் குர்திகள் இன்று பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்பொழுது சந்தையில் ட்ரெண்டில் முன்னணி ஆடைகளை குர்திஸ் தான் இருக்கிறது. விதவிதமான கலர்ஸ் மற்றும் டிசைன்களில் இருக்கிறது.

ஸ்ட்ரெய்ட் கட் குர்தி

இது அலுவலகம் மற்றும் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் உகந்த ஒரு கிளாசிக் டிசைன் ஆகும்.

இந்த குர்தி டிசைன்கள் நேராகவும், உடலுக்குக் கச்சிதமான ஃபிட்டிங்கிலும் இருக்கும் இந்த வகை குர்திகளை ஜீன்ஸ், லெகின்ஸ் அல்லது சிகரெட் பேண்ட்களுடன் மேட்ச் செய்து அணியலாம். இது பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தரும்.

Strait Cut Suit

அனார்கலி குர்தி

பாரம்பரிய விழாக்களுக்கும் பண்டிகை நாட்களுக்கும் அனார்கலி டிசைன் எப்போதும் முதலிடம் பெறுகிறது.

மார்பளவு வரை கச்சிதமாகவும், இடுப்புக்குக் கீழே நல்ல சுருக்கங்களுடன் குடை போல அகலமாகவும் இந்த குர்திகள் இருக்கும்.

காட்டன், சில்க், மற்றும் ஜார்ஜெட் துணிகளில் வரும் அனார்கலி குர்திகள் பெண்களுக்கு ஒரு கம்பீரமான இளவரசி போன்ற தோற்றத்தை அளிக்கின்றன.

Anarkali suit

ஏ-லைன் குர்தி

ஆங்கில எழுத்தான 'A' வடிவத்தை ஒத்திருக்கும் இந்த குர்திகள், இடுப்பில் இருந்து கீழ்நோக்கிச் செல்லச் செல்ல அகலமாகிக் கொண்டே போகும்.

அனைத்து உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் இது மிக அழகாகப் பொருந்தும். இதை பிளாசோ அல்லது தடிமனான லெகின்ஸுடன் இணைத்து அணிந்து கொள்ளலாம்.

A Line Suit

கஃப்தான் ஸ்டைல் குர்தி

தற்போதைய ஃபேஷன் உலகில் மிகவும் வேகமாகப் பிரபலமடைந்து வரும் டிசைன் கஃப்தான் ஆகும்.

உடலோடு ஒட்டாமல், மிகவும் தளர்வாக மற்றும் கைகள் இரக்கையுள்ள பட்டர்ஃபிளை வடிவில் இருக்கும் இந்த ஆடை, கோடை காலத்திற்கு மிகவும் வசதியானது. இது பார்ப்பதற்கு மிகவும் மாடர்னான தோற்றத்தைத் தருகிறது.

Kaftan Style Suit

பிரண்ட் ஸ்லிட் குர்தி

நவீன இளம் பெண்களைக் கவர்ந்த மற்றொரு டிசைன் முன்பக்கத் திறப்பு கொண்ட குர்திகள் இதுவாகும்.

இந்த ஆடைகளின் முன்பக்கத்தில் நடுவே அல்லது ஒரு பக்கமாக நீண்ட கீறல் போன்று கொடுக்கப்பட்டிருக்கும். இதனை ஹை-வேஸ்ட் ஜீன்ஸ் உடன் அணியும்போது மிகச் சிறந்த இந்தோ-வெஸ்டர்ன் லுக் கிடைக்கும்.

Front Slit Suit

அங்கரகா குர்தி

பண்டைய காலத்து ராஜபுதன உடைகளின் பாணியில் வடிவமைக்கப்படும் குர்தி இதுவாகும்.

இதன் முன்பக்கம் ஒரு பகுதி மற்றொரு பகுதியின் மேல் மூடுவது போலவும், பக்கவாட்டில் கட்டுவதற்கு அழகான கயிறுகள் மற்றும் குஞ்சங்கள் வைத்தும் தைக்கப்படும். இது ஒரு தனித்துவமான எத்னிக் லுக் தரக்கூடிய ஒன்றாகும்.

Angrakha Kurti Suit

ஷார்ட் குர்தி

ஜீன்ஸ் மற்றும் ஸ்கர்ட் அணிபவர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் இந்த ஷார்ட் குர்திகள் ஆகும்.

இடுப்பு வரை மட்டுமே இருக்கும் இந்த ஆடைகள், தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியானவை. குறிப்பாகக் கல்லூரி மாணவிகள் காட்டன் துணியிலான ஷார்ட் குர்திகளை அதிகம் விரும்புகின்றனர்.

Short Suit

டெயில் கட் குர்தி

மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு இது ஏற்றது.

இதன் முன்பக்கம் சற்று குட்டையாகவும், பின்பக்கம் நீண்ட வால் போன்ற அமைப்பிலும் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

பார்ட்டிகள் மற்றும் மாலை நேர விழாக்களுக்கு லெகின்ஸ் இல்லாமல் லாங் கவுன் போலவும் இதை அணிந்து கொள்ளலாம்.

Tail Suit

ஷர்ட் ஸ்டைல் குர்தி

பெண்களுக்கான ஃபார்மல் உடைகளில் இது தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

காலர் நெக் மற்றும் முன்பக்கம் பட்டன்கள் வைக்கப்பட்டு, சட்டையின் வடிவில் இந்த குர்திகள் இருக்கும்.

அலுவலக கூட்டங்கள் மற்றும் நேர்காணல்களுக்கு ஜீன்ஸ் அல்லது ஆங்கிள் லெந்த் பேண்ட்களுடன் அணியும் மிகவும் கம்பீரமான தோற்றத்தை தரும்.

Short Style Suit

டியூலிப் குர்தி

டியூலிப் மலரின் இதழ்கள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியது போன்ற வடிவத்தில் இதன் கீழ் பகுதி தைக்கப்படும்.

இது பார்ப்பதற்கு மிகவும் நளினமாகவும், ஸ்டைலாகவும் இருக்கும்.

இந்த வகை குர்திகளுக்கு எனத் தனியாக டியூலிப் பேண்ட்களும் சந்தையில் கிடைக்கின்றன.

Tulip Suit
X

Maalai Malar
www.maalaimalar.com