பவுண்டேஷன் யூஸ் பண்றதுக்கு எது பெஸ்ட்?.. பிரஷா அல்லது பிளெண்டரா?

முகப்பரு தழும்புகள் அதிகமாக இருந்தால் அதை மறைக்க பிரஷ் தான் சிறந்த தேர்வு.
Foundation Application
Foundation Application
Published on

இன்றைய காலகட்டத்தில் மேக்கப் போடும் பழக்கம் பெண்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது. முகம் பளபளப்பாகவும், இயற்கையாகவும் மாறுவதற்கு நாம் பயன்படுத்தும் பவுண்டேஷன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், எவ்வளவு விலை உயர்ந்த பவுண்டேஷன் வாங்கினாலும், சிலருக்கு முகம் திட்டுத்திட்டாக அல்லது கேக்கியாக மாறிவிடுகிறது.

இதற்கு முக்கிய காரணம், பவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்ய சரியான பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் பயன்படுத்தாததே ஆகும். உங்களது மேக்கப் கச்சிதமாக அமைய எந்த பிரஷ் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான பியூட்டி டிப்ஸ் பார்க்கலாமா?

Foundation Application
Foundation Application

பவுண்டேஷன் பிரஷ் ஏன் ரொம்ப முக்கியம்?

விரல்களால் பவுண்டேஷன் போடும்போது, கைகளில் உள்ள எண்ணெய் மற்றும் பாக்டீரியா முகத்தில் பரவி பருக்களை உண்டாக்கலாம்.

மேலும், விரல்களால் முகம் முழுவதும் பவுண்டேஷனை சமமாகப் பரப்ப முடியாது. ஒரு நல்ல மேக்கப் பிரஷ், உங்களது மேக்கப்பை நீண்ட நேரம் அலையாமல், நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.

Foundation Application

ஃபிளாட் பவுண்டேஷன் பிரஷ்:

இது பெயிண்ட் பிரஷ் போல தட்டையாகவும், இறுக்கமான முடிகளுடனும் இருக்கும். லிக்விட் அல்லது கிரீம் பவுண்டேஷனை முகத்தில் சமமாகப் பூசுவதற்கு இது சிறந்தது.

முகத்தின் மூலை முடுக்குகளில் மூக்கின் ஓரங்கள், கண்களுக்குக் கீழே பவுண்டேஷனை துல்லியமாக அப்ளை செய்ய இது உதவும்.

இதை பவுண்டேஷனை முகத்தின் மையப் பகுதியிலிருந்து தொடங்கி, வெளிப்பக்கமாக இழுத்து அப்ளை செய்து பயன்படுத்த வேண்டும்.

Foundation Application

பஃபிங் பிரஷ் எப்படி பயன்படுத்த வேண்டும்:

பஃபிங் பிரஷ்ஷின் நுனி பகுதி அடர்த்தியாகவும், வட்ட வடிவிலும் சமமாகவும் இருக்கும். பவுண்டேஷனை முகத்தோடு நன்றாக 'பிளெண்ட்' செய்ய இதுவே டாப் சாய்ஸ்.

பவுண்டேஷனை தோலுக்குள் நன்றாக ஊடுருவச் செய்து, ஏர்-பிரஷ் (போன்ற மென்மையான தோற்றத்தைத் தரும்.

முகத்தில் பவுண்டேஷனை புள்ளிகளாக வைத்துக் கொண்டு, இந்த பிரஷ்ஷால் வட்ட வடிவில் மெதுவாகத் தேய்த்து வந்தால் கட்சித்தனமான லுக்கைத் தரும்.

Foundation Application

பிரஷ்ஷா? பியூட்டி பிளெண்டரா? எது பெஸ்ட்?

பலருக்கும் இருக்கும் பெரிய சந்தேகம் இதுதான். உங்களுடைய சருமத்தின் தேவைக்கு ஏற்ப இதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதிக கவரேஜ் வேணுமா? என்றால் உங்களுக்கு முகப்பரு தழும்புகள் அதிகமாக இருந்து, அதை மறைக்க தடிமனான மேக்கப் தேவைப்பட்டால் மேக்கப் பிரஷ் தான் சிறந்த தேர்வு.

இது பவுண்டேஷனை உறிஞ்சாமல் முழு கவரேஜ் தரும். இயற்கையான லுக் வேணுமா? என்றால் தினமும் கல்லூரி அல்லது அலுவலகம் செல்ல 'நோ-மேக்கப் லுக்' வேண்டும் என்பவர்கள் ஈரமான பியூட்டி பிளெண்டர் பயன்படுத்தலாம்.

இது முகத்தில் உள்ள அதிகப்படியான மேக்கப்பை உறிஞ்சி, மிகவும் இயற்கையான பளபளப்பைத் தரும். உங்களது முகபாவனைக்கு ஏற்றார் போல் பயன்படுத்தி கொள்ளலாம்.

Foundation Application

பிரஷ்களை பராமரிக்கும் முறைகள்:

எவ்வளவு நல்ல பிரஷ் பயன்படுத்தினாலும், முறையான பராமரிப்பு இல்லை என்றால் முக அழகு பாழாகிவிடும். வாரத்திற்கு ஒருமுறை உங்களது பிரஷ்களை மேக்கப் க்ளென்சர் அல்லது மைல்டான பேபி ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

அழுக்கு பிரஷ்களைப் பயன்படுத்தினால் முகத்தில் அலர்ஜி மற்றும் முகப்பருக்கள் வர வாய்ப்பு அதிகம். கழுவிய பின் பிரஷ்களை தலைகீழாக அல்லது தட்டையாக ஒரு துணியின் மீது வைத்து உலர்த்த வேண்டும்.

நேராக நிமிர்த்தி வைத்தால் தண்ணீர் பிரஷ்ஷின் பசைக்குள் சென்று முடிகள் கொட்ட ஆரம்பித்துவிடும். ஒரு தடவை பயன்படுத்தினால் மறுபடியும் அதை கழுவிவிட்டு உபயோகிக்க வேண்டும்.

அப்படி செய்து வந்தால் முகத்தில் பரு, அலர்ஜி இது போன்ற ஒன்றுமே வர வாய்ப்பே இல்லை. சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒவ்வொருவரும் தனித்தனியான பிரஷ்களை பயன்படுத்த வேண்டும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com