"இனி பார்லர் போக வேண்டாம்! உங்க வீட்டு சமையலறையிலேயே இருக்கு 'இன்ஸ்டன்ட் ஃபேஷியல்' ரகசியம்!"

சோப்பிற்குப் பதிலாக 'ஃபேஸ் வாஷ்' மற்றும் 'சீரம்' பயன்படுத்துவது நைட் ரொட்டீனுக்கு மிகவும் நல்லது.
InstantFacialAtHome
Published on

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், வேலைக்குச் செல்லும் பலரும் தங்களது சருமத்தைப் பராமரிக்கச் சலூன்களுக்குச் செல்வதற்கு நேரம் இருப்பதில்லை.

இதனால் காற்று மாசுபாடு போன்ற பல இன்னல்களை சந்திப்பது இல்லாமல், கரும்புள்ளிகள், சன் டேன் பாதிப்புகள் மற்றும் சுருக்கங்களை நீக்கி, வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே நமது சருமத்தை பளிச்சென்று 'ஹோம் ரெமடி' செய்து நாமே பார்த்துக்கொள்ளலாம்.

Riceflourpack

அரிசி மாவு + பால் 'கிளென்சிங்'

நாம் அனைவரின் வீட்டில் அரிசி மாவு இருக்கும். தேவையான அளவு அரிசி மாவு, தேவையான அளவு காய்ச்சாத பிரெஷ் பால்.

இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மேல்நோக்கியவாறு மசாஜ் செய்ய வேண்டும். கலவை மிகவும் கெட்டியாக இல்லாமல் சற்று தண்ணீராக இருக்க வேண்டும். இல்லையெனில் சரும துவாரங்கள் பெரிதாகி அரிப்பு ஏற்படலாம்.

5 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், சலூனில் கிளென்சிங் செய்தது போன்ற பொலிவு கிடைக்கும்

CoffeeFaceScrub

காபி தூள் 'ஸ்கரப்பிங்'

காபி தூள் ஸ்கர்ப்பிங் செய்வதற்கு காபித்தூள், சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த நான்கையும் கலந்து ஒரு தடிமனான பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதனை முகத்தில் தடவி 3 முதல் 5 நிமிடங்கள் வரை மிகவும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். சர்க்கரை கரையத் தாமதமாகும் என்பதால், கரும்புள்ளிகளை நீக்குகிறேன் என்று முகத்தை வேகமாகத் தேய்க்கக் கூடாது; இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.

Papayafacepack

பப்பாளி + தேன் 'ஃபேஸ் மாஸ்க்'

ஃபேஸ் மாஸ்க் மிகவும் அவசியம். இதற்கு தேவையான நன்றாகக் குலைந்த பப்பாளியை எடுத்து நன்றாக பழக்கூல் போன்று எடுத்துக்கொள்ளவும். 1 அல்லது 2 ஸ்பூன் தேன் எடுத்துக்கொள்ளவும்.

இரண்டையும் கலந்து முகத்தில் 'மாஸ்க்' போல அப்ளை செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலரவிட வேண்டும். மாஸ்க் காய்ந்ததும் சருமம் சற்று இறுகும் என்பதால், முகத்தை ரஃப்பாகத் தேய்க்காமல், மென்மையாகக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும்.

இது சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சியையும், பளபளப்பையும் தரும்.

GheeForFace

சிம்பிள் 'மேஜிக் டிக்'

சிலர் அவ்வளவு கேர் செய்யாமல் சிம்பிளாக எப்படி ரெடி ஆகுவது என்று யோசிப்பார்கள். அவர்களுக்கு இது மிகவும் உதவும்.

சிறிதளவு சுத்தமான நெய்யை கைகளில் எடுத்து, முகத்தில் 5 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். பின்னர் சோப்போ, ஃபேஸ் வாஷோ பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவித் துடைக்க வேண்டும்.

இது வறண்ட சருமம் இல்லாத மற்ற அனைத்து சருமத்தினருக்கும் ஒரு சிறந்த பிரகாசத்தைக் கொடுக்கும். குறிப்பாக அதிக எண்ணெய் பசை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம்.

UseFacwWash&SerumForFace

ஆலோசனைகள்

வெளியில் சென்றுவிட்டு வந்ததும் சோப்பிற்குப் பதிலாக நல்ல 'ஃபேஸ் வாஷ்' மற்றும் சருமத்திற்கு ஏற்ற 'சீரம்' பயன்படுத்துவது நைட் ரொட்டீனுக்கு மிகவும் நல்லது.

வெறும் வெளிப்புறப் பராமரிப்பு மட்டும் போதாது; சருமம் எப்போதும் 'பேபி ஸ்கின்' போல மிருதுவாக இருக்கத் தினமும் அதிகளவு தண்ணீர் மற்றும் தேவையான சத்தான உணவுகள் போன்றவற்றை உட்கொள்வது மிக மிக அவசியமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com