இந்த 5 விதைகளை சாப்பிட்டால் டாக்டர் கிட்ட போகவே வேண்டாம்!

இளமை, அழகு, ஆரோக்கியம் மூன்றையும் தரும் இயற்கையின் ரகசியம்!
HealthySeeds
Published on

நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்களால் பலருக்கும் உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், நம் அன்றாட உணவில் சிறிய அளவில் சேர்த்துக் கொள்ளும் இயற்கை விதைகள் உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும் வழங்கி, பல கொடிய நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

Sabja Seeds

சப்ஜா விதைகள்

கோடை காலத்திலும், உடல் சூடு அதிகமாகும் போதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சப்ஜா விதைகள் ஆகும்.

இந்த விதைகள் உடலுக்குக் குளுமையைத் தருவதுடன், செரிமான மண்டலத்தைச் சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கின்றன.

தண்ணீரில் ஊற வைக்கும் போது இது ஜெல்லி போல மாறும். இதனை உணவுக்கு முன் குடித்தால் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

Seeya Seeds

சியா விதைகள்

உலகளவில் ஆரோக்கிய விரும்பிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான விதை சியா விதை.

இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் , நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளன.

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Pumpkin Seeds

பூசணி விதைகள்

பூசணிக்காயை சமைத்துவிட்டு அதன் விதைகளை நாம் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், அதில் தான் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளன. இது ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கும், ஹார்மோன் சமநிலைக்கும் மிகவும் நல்லது.

பூசணி விதைகளில் உள்ள 'டிரிப்டோபான்' என்ற அமினோ அமிலம் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

Flax Seeds

ஆளி விதைகள்

சைவ உணவு உண்பவர்களுக்கு மீனுக்கு மாற்றாக ஒமேகா-3 சத்துக்களைத் தரும் ஒரே அற்புதமான உணவு ஆளி விதைகள் ஆகும்.

பெண்களின் மாதவிடாய் மற்றும் ஹார்மோன் குறைபாடுகளைச் சீராக்க ஆளி விதைகள் பெரிதும் உதவுகின்றன.

ஆளி விதைகளை லேசாக வறுத்து, பொடி செய்து தோசை மாவு, சட்னி அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.

Sunflower Seeds

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி பூவில் இருந்து பெறப்படும் இந்த விதைகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வல்லவை.

இதில் வைட்டமின் E மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது சருமத்தைச் சுருக்கங்கள் இன்றி இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இது துணைபுரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com