லிப் லைனர் எப்படி யூஸ் பண்றதுனு தெரியலையா? அப்போ இது உங்களுக்குத்தான்!..

லிப் லைனர் போடுவதற்கு முன்பு உதடுகளில் வறண்ட தோல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்
LipLinerHacks
Published on

பெண்களின் முக அழகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் உதட்டு ஒப்பனைக்கு முக்கியப் பங்குண்டு.

ஆனால், பல நேரங்களில் லிப்ஸ்டிக் மட்டும் பூசும்போது அது உதடுகளின் வடிவத்தை முழுமையாக்காமல் அரைகுறையாகக் காட்டும்.

உதடுகளுக்குத் துல்லியமான வடிவத்தையும், கவர்ச்சியான பொலிவையும் தரக்கூடிய 'லிப் லைனர்' மேக்கப் கலையில் ஒரு மேஜிக் குச்சி போன்றது.

LipLinerHacks

உதடுகளைத் தயார் செய்தல்

லிப் லைனர் போடுவதற்கு முன்பு உதடுகளில் வறண்ட தோல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். லேசான சர்க்கரை மற்றும் தேன் கலந்த கலவையால் உதடுகளை ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை நீக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் லிப் லைனரை பயன்படுத்தும் பொது கோடுகள் நேர்த்தியாக விழ உதவுகிறது.

LipLinerHacks

சரியான நிறத்தைத் தேர்வு செய்தல்

நீங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் நிறத்திற்குச் சமமான அல்லது அதைவிட ஒரு ஷேட் சற்று அடர்ந்த நிற லைனரைத் தேர்வு செய்ய வேண்டும். இது உதடுகளுக்குத் தெளிவான வடிவத்தைக் கொடுக்கும். லிப்ஸ்டிக் உதட்டை விட்டு வெளியே பரவாமல் தடுக்கும்.

நீங்கள் அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடுகிறீர்கள் என்றால், அதே சிவப்பு அல்லது மெரூன் கலந்த சிவப்பு லைனரைப் பயன்படுத்தலாம்.

எந்த லிப்ஸ்டிக்கிற்கு எந்த லைனர் செட் ஆகும் என்ற குழப்பம் இருந்தால், உங்கள் உதட்டின் இயற்கையான நிறத்தோடு ஒத்துப்போகும் 'நியூட்' நிற லைனரைப் பயன்படுத்தலாம்.

இது அனைத்து வகையான மற்றும் அனைத்து நிற லிப்ஸ்டிக்குகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

LipLinerHacks

எப்படி வரைவது?

லைனரை வரையத் தொடங்கும் போது, மேல் உதட்டின் நடுவில் இருக்கும் 'Cupid's bow' இடத்தில் ஒரு சிறிய 'X' குறியீட்டை இட்டு, அங்கிருந்து உதட்டின் ஓரங்களை நோக்கி மெதுவாக அவுட்லைன் கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து, கீழ் உதட்டின் நடுப்பகுதியிலிருந்து தொடங்கி இரு ஓரங்களையும் இணைக்க வேண்டும். இவ்வாறு வரையும் போது உதடுகளைச் சற்றே திறந்து வைத்துக் கொண்டால் கோடுகள் நேராகவும் துல்லியமாகவும் வரும்.

இறுதியாக, வரைந்த கோட்டை விரலால் அல்லது பிரஷ்ஷால் உதட்டின் உள்பகுதி நோக்கிச் சற்றுத் தேய்த்துவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் போட்டால் உதடுகள் மிகவும் இயற்கையாகவும் அழகாகவும் பளிச்சென்று எடுப்பாகவும் காட்சியளிக்கும்.

LipLinerHacks

லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நீடிக்க

வெறும் அவுட்லைன் மட்டும் போடாமல், லிப் லைனரைக் கொண்டு உதட்டின் உள் பகுதியிலும் லேசாகத் தீட்டிக் கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்வதால், நீங்கள் மேலே பூசும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அழியாமல் அப்படியே இருக்கும். இறுதியாக, உங்கள் லிப்ஸ்டிக்கைப் பூசி, விரலால் லேசாகத் தடவி விட்டால் அழகான, இயற்கையான உதடுகள் போல் தெரியும்.

LipLinerHacks

கன்சீலர் ஃபினிஷிங்

லைனர் வரையும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டாலோ அல்லது கோடு உதட்டைத் தாண்டி வெளியே சென்றாலோ கவலைப்படத் தேவையில்லை.

ஒரு சிறிய பிரஷில் கன்சீலர் எடுத்து உதட்டின் வெளிப்புற ஓரங்களில் தடவித் துடைத்தால், அவுட்லைன் மிகத் துல்லியமாகவும் எடுப்பாகவும் மாறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com