DIET இருக்காமலையே உடல் எடையை குறைக்க முடியுமா? அது எப்படி?

அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.
Easy Weight Loss
Published on

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டினி கிடப்பதும், பிடித்த உணவுகளைத் தவிர்ப்பதும்தான்.

ஆனால், கடுமையான டயட் ஏதும் இல்லாமலேயே, அன்றாடப் பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க முடியும்.

Easy Weight Loss

தண்ணீரின் அற்புதம்:

உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதைக் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இது உங்களது செரிமான மண்டலத்தைச் சீராக்குவதுடன், அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தடுத்து, வயிறு நிறைந்த உணர்வைத் தரும். மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.

Easy Weight Loss

சாப்பிடும் பழக்கம்:

டிவி அல்லது மொபைல் போன் பார்த்துக் கொண்டே சாப்பிடும்போது, நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவு நமக்கே தெரிவதில்லை. உணவை நன்றாக ரசித்து, வாயில் வைத்து 20 முதல் 30 முறை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

இப்படிச் செய்யும்போது மூளைக்கு வயிறு நிறைந்த செய்தி சீக்கிரம் சென்றுவிடும், இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தவும். தேவையற்ற உணவுகளை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

Easy Weight Loss

தூக்கமும் உடல் எடையும்:

குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேர நிம்மதியான தூக்கம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தூக்கம் குறையும்போது உடலில் 'கிரெலின்' என்ற பசி தூண்டும் ஹார்மோன் அதிகரித்து, தேவையற்ற நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடத் தூண்டும்.

போதிய தூக்கம் இருந்தால் இந்த ஹார்மோன் சமநிலையில் இருக்கும். சாப்பிட்டவுடன் தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அது உடல் எடையை அதிகரிக்கும்.

Easy Weight Loss

சிறிய தட்டுகள், பெரிய மாற்றங்கள்:

பலர் உணவருந்தும் போது பெரிய தட்டுகளில் சாப்பிடும்போது உணவு குறைவாகத் தெரிவதால், நாம் மீண்டும் மீண்டும் உணவைப் பரிமாறிக் கொள்வோம்.

இதற்குப் பதிலாக சிறிய தட்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கினால், குறைவான அளவே சாப்பிடுவோம். இது உளவியல் ரீதியாக நம் கலோரி அளவைக் குறைக்க உதவும் ஒரு எளிய வழியாகும்.

Easy Weight Loss

சுறுசுறுப்பான தினசரி வாழ்க்கை:

ஜிம்முக்குச் சென்றுதான் கலோரியை எரிக்க வேண்டும் என்பதில்லை. லிஃப்ட்க்குப் பதிலாக படிகளைப் பயன்படுத்துவது, சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் மெதுவாக நடப்பது, நின்றுகொண்டே போன் பேசுவது போன்ற சிறிய சுறுசுறுப்பான நடவடிக்கைகள் மூலமே உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் தானாகவே குறையத் தொடங்கும்.

கடுமையான டயட் மூலம் எடையைக் குறைத்தால் அது தற்காலிகமாகவே இருக்கும். ஆனால், இதுபோன்ற ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் உங்கள் எடையை நிரந்தரமாகவும் பக்கவிளைவுகள் இல்லாமலும் கட்டுக்குள் வைக்க உதவும்.

உங்களால் உடைந்த காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடலுக்கும் நல்லது மனதிற்கும் ஆரோக்கியம் தான்.

X

Maalai Malar
www.maalaimalar.com