உங்களுக்கு லென்ஸ் வைக்க பிடிக்குமா? எப்போ.. எதுக்கு.. என்ன லென்ஸ் வைக்கணும் சொல்றேன் கேட்டுக்கோங்க!

லென்ஸ் வாங்கும் போது தரமான பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
Contact Lenses
lens
Published on

இன்றைய இளைஞர்களின் ஃபேஷன் லிஸ்ட்டில் காண்டாக்ட் லென்ஸ்கள் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டன. கண்ணாடி அணிவதை தவிர்க்க நினைப்பவர்கள் ஒருபுறம் என்றால், தங்களின் லுக்-ஐ மொத்தமாக மாற்ற நினைப்பவர்கள் மறுபுறம் என லென்ஸ் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால், லென்ஸை எப்போது, எதற்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம்.

Contact Lenses
lens

எப்போ லென்ஸ் வைக்கணும்?

லென்ஸ்கள் உங்கள் முகத்திற்கு உடனடி மாற்றத்தையும், தனி அழகையும் தரும். இவற்றை சில மும்கியமான தருணங்களில் பயன்படுத்தலாம்.

விசேஷ நாட்களில் பயன்படுத்தலாம் ஏனென்றால், கனமான பட்டுப்புடவை, லெஹங்கா அல்லது கிராண்ட் மேக்கப் போடும் போது கண்ணாடி அணிந்தால் மேக்கப் மறைந்துவிடும். அதுபோன்ற நேரங்களில் லென்ஸ் வைப்பது உங்கள் கண்களை தனியாக எடுத்துக் காட்டும்.

ஐ மேக்கப் போடும்போது ஸ்மோக்கி ஐஸ் அல்லது கட் கிரீஸ் போன்ற பிரத்யேக கண் மேக்கப் செய்யும்போது லென்ஸ் அணிந்தால் தோற்றம் இன்னும் ராயலாக இருக்கும். தினமும் ஃபார்மல் அல்லது கேஷுவல் உடைகளுக்கு ஏற்ப மிக மென்மையான நேச்சுரல் லென்ஸ்களை அணிந்து கொள்ளாம்.

Contact Lenses
lens

எதுக்கு லென்ஸ் வைக்கணும்?

முக அமைப்பை மேம்படுத்த சிலருக்கு கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். அவர்கள் சரியான லென்ஸ் மற்றும் ஐ-லைனர் காம்போவை பயன்படுத்தும்போது கண்கள் பெரியதாகவும், கவர்ச்சியாகவும் மாறும்.

கான்ஃபிடன்ஸ் பூஸ்ட் iruka வேண்டும் என்றால் தடிமனான கண்ணாடிகள் உங்கள் முக அழகை மறைப்பதாக நீங்கள் நினைத்தால், லென்ஸ்கள் உங்களுக்கு தனி தன்னம்பிக்கையைத் தரும்.

புகைப்படங்களில் அழகாகத் தெரியவதற்கு போட்டோஷூட் மற்றும் செல்ஃபிக்களில் கண்கள் 'ஸ்பார்க்ளிங்' ஆக பளிச்சென்று தெரிய லென்ஸ்கள் உதவுகின்றன.

Contact Lenses
lens

என்ன லென்ஸ் வைக்கணும்?

அழகுக்காக லென்ஸ் வாங்கும் போது உங்கள் சரும நிறம் மற்றும் கூந்தல் நிறத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். ஃபேர் ஸ்கின் நீங்கள் நல்ல நிறமுள்ளவராக இருந்தால் புளூ , க்ரே மற்றும் அக்வா போன்ற போல்டான நிறங்கள் உங்களுக்கு அட்டகாசமாகப் பொருந்தும்.

மாநிறமாக இருந்தால் இந்திய சரும நிறத்திற்கு ஹேசல், ஹனி மற்றும் ப்ரவுன் நிற லென்ஸ்கள் உலகளாவிய அளவில் மிகச் சிறந்த நேச்சுரல் லுக்கைத் தரும்.

மாநிறம் அல்லது கறுத்த நிறமுள்ளவர்கள் டார்க் ப்ரவுன், வார்ம் ஹேசல் அல்லது டார்க் க்ரேநிறங்களைத் தேர்ந்தெடுத்தால் கண்கள் பிரகாசமாக மின்னும்.

Contact Lenses
lens

லென்ஸை எப்படி பாதுகாப்பாக வைக்கணும்?

லென்ஸ் வைப்பது கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கான மிக எளிமையான, பாதுகாப்பான ஸ்டெப்ஸ், முதலில் லென்ஸைத் தொடும் முன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக கைகளில் ஈரப்பதம் இருக்கக் கூடாது. லென்ஸ் செக் லென்ஸை உங்களது ஆள்காட்டி விரல் நுனியில் வைக்க வேண்டும். அது ஒரு கிண்ணம் போன்ற வடிவத்தில் நேராக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

விளிம்புகள் வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அது தலைகீழாக உள்ளது என்று அர்த்தம். மற்றொரு கையின் நடுவிரலால் உங்கள் மேல் கண் இமையையும், லென்ஸ் இருக்கும் கையின் நடுவிரலால் கீழ் கண் இமையையும் நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இதனால் கண்கள் சிமிட்டாமல் இருக்கும். இப்போது கண்ணாடியைப் பார்த்து, லென்ஸை மெதுவாகக் கருவிழியின் மீது வைக்க வேண்டும். லென்ஸ் உள்ளே அமர்ந்ததும், கைகளை எடுத்துவிட்டு மெதுவாகக் கண்களை மூடி, கருவிழியை அங்கும் இங்குமாக உருட்ட வேண்டும்.

இப்போது லென்ஸ் கச்சிதமாகப் பொருந்தி பார்வை தெளிவாகும். கவனமாக வைக்க வேண்டும் உங்களுக்கு பார்வை மங்கின மாதிரி தெரிந்தால் அதனை எடுத்து விட்டு மறுபடியும் வைக்க வேண்டும்.

Contact Lenses
lens

பியூட்டி அலர்ட்:

லென்ஸ் அழகானது தான் என்றாலும், வாங்கும் போது தரமான பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், அழகுக்காக வைக்கும் லென்ஸ்களை ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து அணியக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com