இளம்பெண்களைக் கவரும் லேட்டஸ்ட் டிரெண்டிங் ஹேர் பேண்டுகள்!

மேட்சிங் மேஜிக்: ஒவ்வொரு உடைக்கும் தனித்தனி வண்ணங்களில் அசத்தும் ஹேர் பேண்டுகள்
Trending Hair Bands
Trending Hair Bands
Published on

இன்றைய காலக்கட்டத்தில் ஹேர் பேண்டுகள் என்பது தலைமுடியைக் கலைந்து போகாமல் தடுப்பதற்கான பொருள் மட்டுமல்ல.

அது முழுக்க முழுக்கத் தங்களை இன்னும் அழகாகக் காட்டிக் கொள்வதற்காகப் பெண்கள் பயன்படுத்தும் ஒரு முக்கிய அழகு சாதனப் பொருளாக மாறியுள்ளது. சிகை அலங்காரத்திற்குத் தனிப்பொலிவு தரும் அழகு ஹேர் பேண்டுகள்.

Hair Bands
Trending Hair Bands

ஆடம்பரத் தோற்றம்

பார்ட்டிகள் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும்போது தங்களின் பிரம்மாண்ட ஆடைகளுக்குப் பொருத்தமாக, முத்துக்கள் மற்றும் மினுமினுக்கும் கற்கள் பதிக்கப்பட்ட மெட்டல் ஹேர் பேண்டுகளைப் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இவை சாதாரண கூந்தல் அமைப்பையும் உடனடியாக ஒரு தேவதை போன்ற ஆடம்பரத் தோற்றத்திற்கு மாற்றுகின்றன.

BOW Hair Bands
BOW Hair Bands

கொரியன் ஸ்டைல் போ

தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ்களில் மிகவும் பிரபலமாக இருப்பது கொரியன் ஸ்டைல் ஹேர் பேண்டுகள் ஆகும்.

பெரிய வடிவிலான ரிப்பன்கள், கார்ட்டூன் வடிவங்கள் மற்றும் பட்டுத் துணியால் ஆன போ வடிவங்கள் கொண்ட இந்த பேண்டுகள், கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு க்யூட்டான தோற்றத்தைத் தருகின்றன.

Flower Design Hair Bands
Flower Design Hair Bands

ஜரிகை மற்றும் பூ டிசைன்கள்

பட்டுப் புடவை அல்லது சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகளை அணியும்போது, அதற்கு மேட்ச் செய்யும் வகையில் விதவிதமான வண்ணத் துணிகளால் ஆன மற்றும் பூக்கள் செதுக்கப்பட்ட ஹேர் பேண்டுகள் இப்போது கிடைக்கின்றன.

இது கூந்தலுக்குப் பூ வைப்பது போன்ற ஒரு அழகான தோற்றத்தை எளிதாகக் கொடுத்துவிடுகிறது.

Scrunchies Hair Band
Scrunchies Hair Band

மல்டி-பர்பஸ் ஸ்க்ரஞ்சிஸ்

தலைமுடியில் சாதாரணமாகக் கொண்டை போட்டுக் கொண்டு, அதன் மேல் கலர்ஃபுல்லான சாடின் ஸ்க்ரஞ்சிகளை மாட்டிவிடுவது தற்போதைய ட்ரெண்ட்.

இதனைத் தலையில் அணியாத நேரங்களில், கைகளில் ஒரு அழகான பிரேஸ்லெட் போலப் மாட்டிக் கொள்வது பெண்களின் புதிய பேஷனாக மாறியுள்ளது.

Stylish Hair Bands
Stylish Hair Bands

ஸ்பெஷல் பேண்டுகள்

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்பவர்கள் மற்றும் மாடலிங் போட்டோஷூட் எடுப்பவர்கள் தங்களின் முகத்தை இன்னும் எடுப்பாகக் காட்டுவதற்காகவே தனித்துவமான வடிவங்களில் இருக்கும் ஹேர் பேண்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தனி ஸ்டைலுடன் காட்சியளிக்க முடிகிறது.

Matching Hair Bands
Matching Hair Bands

மேட்சிங் மேஜிக்

ஒவ்வொரு உடைக்கும் தனித்தனி வண்ணங்களில் ஹேர் பேண்டுகளை மேட்ச் செய்து அணிவது இப்போது ஃபேஷனாகிவிட்டது.

இதற்காகவே ஆன்லைனில் ஒரே பாக்கெட்டில் 10 முதல் 20 வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட ஸ்டைலிஷ் ஹேர் பேண்டுகள் மலிவு விலையில் கிடைப்பதால், பெண்கள் இவற்றை ஆவலுடன் வாங்கித் தங்களது அழகை வர்ணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com