

இதற்கான எளிய வீட்டு முறை வைத்தியம் ஒன்று இருக்கிறது. அது ஒரு ஸ்பெஷல் எண்ணெய், அதை தலைக்கு தேய்த்து குளித்தால் கண்களில் எரிச்சல் குறைந்து, குளிர்ச்சி அடையும். உடல் புத்துணர்ச்சியாகவும் உணர முடியும். இனி அந்த ஸ்பெஷல் எண்ணெய்யை எப்படி எளிதாக வீட்டிலேயே தயார் செய்வது, பயன்பெறுவது என்பதை பற்றி காணலாம்…
அறிகுறிகள் இந்த எளிய வைத்திய முறையை கண் எரிச்சல் மட்டுமின்றி கண் வலி, கண் சிவந்து காணப்படும் போது கூட பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள் இந்த ஸ்பெஷல் எண்ணெயை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும். நல்லெண்ணெய், வெங்காய சாறு, புளிய இலைச்சாறு போன்றவை தான் தேவையான பொருட்கள்.
செய்முறை:
வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் கொள்ளவும்.
செயல்முறை:
நன்கு கலந்து வைத்துள்ள அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விடவும்