மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்க வேண்டுமா?

கைகளில் வைக்கும் மெஹந்தி நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க சில ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றி, மெஹந்தி வைத்தால், நிச்சயம் மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும்.
மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்க வேண்டுமா?
Published on

எனவே இத்தகைய மெஹந்தியை நீண்ட நாட்கள் தக்க வைப்பதற்கு, ஒருசில ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றி, மருதாணியை வைத்தால், நிச்சயம் மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும். இப்போது, அந்த மெஹந்தி/மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருப்பதற்கு என்னவெல்லம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கைகளை நன்கு கழுவவும் மெஹந்தி வைக்கும் முன், கைகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அதிலும் டோனர் கொண்டு சுத்தம் செய்து மிகவும் சிறந்தது. கெட்டியான மெஹந்தியைப் பயன்படுத்தவும் மெஹந்தி போடும் போது, நன்கு அடர்த்தியான கோடுகளைப் போடுவதால், அவை சருமத்தில் நன்கு ஊடுருவி, நீண்ட நாட்கள் இருக்கும்.

மெஹந்தியை கைகளுக்குப் போட்ட பின்னர், எலுமிச்சை சாற்றில் சர்க்கரையைப் போட்டு சூடேற்றி, குளிர வைத்து, மெஹந்தியானது காய்ந்த பின்னர், அந்த கலவையை பஞ்சு கொண்டு கைகளில் தடவி, 2 மணிநேரம் ஊற வைத்தால், மெஹந்தியானது இன்னும் நல்ல நிறத்துடன் பிடிக்கும்.

மருதாணி போட்ட பின்னர், சிறிது வெஜிடேபிள் ஆயிலை கைகளுக்கு தடவி ஊற வைத்து, பின் கழுவினாலும் நீண்ட நாட்கள் மெஹந்தியானது இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com