குழந்தைகளுக்கு விருப்பமான மசாலா மக்ரோனி

மாலையில் பள்ளியில் இருந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு மசாலா மக்ரோனி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான மசாலா மக்ரோனி
Published on

மக்ரோனி - 100 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து அதில் மக்ரோனியைப் போட்டு 5 நிமிடம் கழித்து வடிக்கவும். உடனே குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கியதும், மக்ரோனியை சேர்த்து நன்கு கலக்குமாறு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்...

சூப்பரான மசாலா மக்ரோனி ரெடி!

X

Maalai Malar
www.maalaimalar.com