

மாம்பழம் - ஒன்று,
ஓரளவு புளித்த மோர் - 500 மில்லி,
காய்ந்த மிளகாய் - 2,
அரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவைக்கவும்.
* நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்...
* அரைத்த விழுதை மோருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
* இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.
* அரைத்த மோர் கலவையை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்..
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து மோரில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
* சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.