

குதிரை வாலி சாதம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிட்டிகை,
காய்ந்த மிளகாய் 3.
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
பிறகு வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.