கவுனி அரிசி காரப் புட்டு

கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வயதானவர்களுக்கு உகந்த கவுனி அரிசியில் காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கவுனி அரிசி காரப் புட்டு
Published on

கவுனி அரிசி மாவு - ஒரு கப்,  
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
எலுமிச்சம் பழம் - அரை மூடி,
கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, 10-15 நிமிடம் ஊறவிடவும்.

இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

பின்னர் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஆவியில் வேக வைத்த புட்டு சேர்த்துக் கிளறவும்.

பிறகு, கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து, தேங்காய் துருவல் தூவி, கிளறிப் பரிமாறவும்.

சூப்பரான சத்தான கவுனி அரிசி காரப் புட்டு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com