மாலை நேர டிபன் இடியாப்ப புலாவ்

காலையில் செய்த இடியாப்பம் மீந்து போனால் மாலையில் அதை வைத்து சூப்பரான புலாவ் செய்யலாம். இன்று இடியாப்ப புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மாலை நேர டிபன் இடியாப்ப புலாவ்
Published on

இடியாப்பம் - 6,
வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1,
பட்டை - ஒரு சிறிய துண்டு,
கீறிய பச்சை மிளகாய் - 2,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம், உப்பு சேர்த்து கிளறவும்.

மசாலா அனைத்து இடியாப்பத்தில் சேர்ந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இடியாப்ப புலாவ் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com